ஸ்காட் டைகர் ரகசியம்
scott.jpg

எப்படி ஜாவா கற்றுகொள்வோர் "Hello world" என்ற குட்டி புரோகிராமோடு ஆரம்பிப்பார்களோ அது போல ஆரக்கிள் (Oracle) கற்று கொள்வோருக்கும் ஒரு மந்திரம் உண்டு.அது ஸ்காட் டைகர் - Scott Tiger என்பது.அது ஒரு default user name and password.இதில் ஸ்காட் என்பது புருஸ் ஸ்காட் (Bruce Scott) என்பவரைக் குறிக்கும்.இவர் ஆரம்பகால ஆரக்கிளில் பணிபுரிந்தவர்களில் ஒருவர்.அப்புறமாய் Software Development Laboratories-ல் பணியாற்றினார்.Gupta Technology நிறுவனத்தை (இப்போது Centura Software) 1984-ல் Umang Gupta-வோடு சேர்ந்து நிறுவினார்.பின்பு PointBase, Inc என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமானார்.Oracle V1, V2 and V3 மென்பொருள்களை வடிவமைத்து எழுதியதில் ஸ்காட்டின் பங்கு பெரும் பங்கு.இதில் SCOTT schema-வை (EMP and DEPT tables) TIGER என்ற பாஸ்வேர்டோடு எழுதியது இவரே.

அப்போ TIGER???
அவரோட செல்லக் குட்டிப் பூனையின் பெயர்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License