பிடிஎப் கோப்புகள் இணைப்பான்
pdfill_tools.pngகல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய உலகத் தமிழர்களின் அபிமான நாவலான "பொன்னியின் செல்வன்" PDF வடிவத்தில் இணையத்தில் கிடைக்கின்றது. ஆனால் அதில் ஒரு சிக்கல். இந்த நாவல் Part 1,Part 2a,Part 3c அப்படி இப்படியென துண்டு துண்டாகவே பல Pdf கோப்புகளாக கிடைக்கின்றன. இந்த துண்டுகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையில் ஒரே பிடிஎப் ஆக்க விரும்பினேன். அனைத்து பகுதிகளையும் இறக்கம் செய்தாயிற்று. இப்படி இறக்கம்
செய்த பல பிடிஎப்-கோப்புகளையும் ஒன்றிணைக்க ஏதாவது எளிய இலவச மென்பொருள் இணையத்தில் இருக்கின்றதாவென தேடியதில் ஏமாற்றமே மிஞ்சியது.கிடைத்த பெரும்பாலான மென்கருவிகள் கட்டளைகளை தட்டும் வகையாகவே இருந்தன சொடுக்கி சொடுக்கி எளிதாய் சாதிக்க விண்டோஸ் வகையாக அவை இல்லை.தேட்டத்திற்கு கடைசியில் பலன் கிடைத்தது. அதன் பெயர் PDFill PDF Tools. It does Merging Combining watermarking pdf files for free.

Product Home Page
http://www.pdfill.com/pdf_tools_free.html

நீங்கள் PDFill, GhostScript, Sun Java Virtual Machine இந்த மூன்றும் நிறுவ வேண்டும்.

Download Pdfill Link
http://www.pdfill.com/download/PDFill_Unicode.exe

Download GhostScript Link
http://www.pdfill.com/download/gs857w32.exe

Download Sun Java Virtual Machine Link
http://www.pdfill.com/download/j2re-1_4_1_07-windows-i586.exe

இதைவிட சிறந்த வேறொரு இலவச பிடிஎப் கோப்புகள் இணைப்பான் மென்பொருள் உங்களுக்கு தெரிந்தால் இந்த நண்பனுக்குத் தெரிவிக்கலாம்.

இப்படி பல கோப்புகளை ஒன்றாய் சேர்த்து இணைத்து உருவான கல்கியின் பொன்னியின் செல்வன் எங்கே என்கின்றீகளா? நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.
Download Kalki Kirushnamoorthy Ponniyin Selvan Complete

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License