டிவைஸ் டிரைவர்களை சேமிப்போம்
screenshot.gif

ஏதோ ஒரு காரணத்துக்காக உங்கள் கணிணியை Reinstall அல்லது Reformat செய்யப் போகிறீர்களா?. உஷார்!!.மீண்டும் விண்டோஸ் நிறுவும் போது உங்கள் கணிணியின் சில பாகங்கள் வேலை செய்யாமல் போகலாம்.(Like Speaker,Network Card).காரணம் என்னவென்றால் தேவையான டிவைஸ் டிரைவர்கள் (Device Drivers) மீண்டும் நிறுவப்படாததால் தான்.ஒன்றில் அந்த டிவைஸ் டிரைவர் உள்ள சிடி அல்லது பிளாப்பி உங்களிடம் இருக்க வேண்டும் அல்லது சரியான அந்த டிவைஸ் டிரைவரை எங்கிருந்தாவது இணையத்திலிருந்து இறக்கம் (Download) செய்ய வேண்டும்.அப்போது தான் அந்த பாகங்கள் வேலை செய்யும்.

ரொம்ப டென்ஷனாகிப் போய்விடும்.சில பழைய டிவைஸ் டிரைவர்கள் இப்போதெல்லாம் கிடைப்பதும் இல்லை.இது போன்ற நேரங்களில் உதவ உங்கள் கணிணியிலுள்ள அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் எங்காவது சேர்த்து சேமித்து (Backup) வைத்து கொள்ளல் நலம்.அதற்கு உதவுவது தான் இந்த எளிய சிறிய மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய தேவையில்லை.ஒரு பென் டிரைவிலிருந்தே (Pen drive) இதை ஓட்டலாம்.இது C:\Driver Collector என்ற இடத்தில் உங்கள் டிவைஸ் டிரைவர்களை சேகரிக்கும்.ஏறக்குறைய எல்லா விண்டோஸ்களிலும் வேலை செய்கிறது.Win95 / Win98 / WinME / WinNT / Win2K / WinXP .

How to backup and save all your computer windows device drivers? Driver Collector V1.2 freeware tool

Download Link
bassam.zip

Add a New Comment
or Sign in as Wikidot user
(will not be published)
- +
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License