ஜிபிஎஸ் - இந்தியா
Ads1.jpg

சிலவருடங்களுக்கு முன்பு மேலைநாடுகளின் சாலைகளில் புதுஇடங்கள் பயணிக்கும் போது நமக்கு வழிக்காட்ட துணையாக ஜீபிஎஸ் (GPS) எனும் கருவி புழக்கத்துக்கு வந்ததை கேள்விப்பட்டபோது இது மாதிரி கருவிகளெல்லாம் நம் ஊருக்கு ஒத்துவருமா பொருந்துமாவென வியந்ததுண்டு. நேர்க்கோடாய் கறுப்பு வண்ணத்தை சிந்திய மாதிரி குறுக்கும் நெடுக்குமாய் புதுசாய் திட்டமிடப்பட்டு போடப்பட்ட ரோடுகளுக்கு வேண்டுமானால் ஜிபிஎஸ் கருவி ஒத்துவரலாம்.ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறுகள் கொண்ட நம்மூர் சாலைகளில் ஜிபிஎஸ் சாத்தியமா, புதிதாய் உருவாகிய நாடுகளில் ஒரு இடத்துக்கு செல்ல ஒன்று அல்லது இரண்டு வழிகள் தான் இருக்கும். நம்மூரில் ஒரு இடத்துக்கு வேண்டுமானால் ஐம்பதுவழிகளில் செல்லலாமே?

அத்தனை இடற்பாடுகளையும் மேற்கொண்டு நம் ஊருக்கும் இப்போது GPS Navigator வந்துள்ளது. இதனை http://navigator.mapmyindia.com எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போதைக்கு A-MAX 06GP5A மற்றும் Delphi NAV 200 எனும் இரு மாடல்களில் கிடைக்கின்றது. இதனை வாங்கி உங்கள் காரில் நீங்கள் பொருத்திக்கொண்டால் தைரியமாய்
இந்தியாவெங்கும் செல்லலாம் என்கின்றார்கள்.

இந்தியா முழுக்க 55,000 கிராம நகரங்களுக்கு இதுவால் வழிகாட்டமுடியும். மாநகரங்களில் Delhi, Gurgaon, Noida, Chandigarh, Mumbai, Thane, Pune, Bangalore, Hyderabad, Kolkata, Chennai போன்ற நகரங்களில் தெருவுக்கு தெரு அதுவால் கூட்டிசெல்ல முடியுமாம்.விலையை கேட்டால் தான் சற்று தலை சுற்றுகின்றது ரூ 20,990/ தான்.

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License