What is router?
Vaishnavi
பிகருங்கல ரூட்டுவிட்டா ரூட்டர்னு சொல்லுவாங்களோ… சும்மா ஜோக்கா இருக்கட்டுமேனு சொன்னேன் யாரும் சண்டைக்கு வந்துடாதிங்க…
எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்கிரேன் ஒரே ஒரு இணையவசதியை பலர் பகிர்ந்துகொள்ள வேண்டுமானால் பொதுவாக பிரவ்சிங் செண்டரில்கூட மாஸ்டர் பிசி வழியாக மற்ற பிசிக்கு நெட்டை ஷேர் பண்ணி இருப்பார்கள்… மாஸ்டர் பிசியை ஆப்செய்துவிட்டால் அதை சார்ந்திருந்த மற்ற கணினிகளுக்கும் இணைய வசதி துண்டிக்கப்பட்டுவிடும்… பிரவ்சிங் சென்டர் என்பதால் ஒரு மாஸ்டர் பிசியை எப்பொழுது ஆன்பண்ணி வைத்துக்கொள்ளலாம்
இதுவே ஒரு இணைய வசதியை நான்கு நண்பர்கள் சேர்ந்து சேர்பண்ணிக்கொள்ளாம் என்றால் யாருடைய பிசியை எப்பொழுதும் ஆன் பண்னி வைப்பது என்ற குழப்பம் வரும்… இதுவே ரூட்டர் என்ற ஒரு சாதனத்தை பெற்றுக்கொண்டால் இணைய வசதியை ரூட்டரில் கனெக்ட் பண்ணிவிட்டு அதில் இருந்து மற்றவர்கள் இணைய வசதியை எடுத்துக்கொள்ளலாம்… ரூட்டர் மட்டும் எப்பொழுதும் ஆன் ல் இருந்தால் போதும்… இதில் வயர்லெஸ் Wi Fi ரூட்டர்களும் இருகின்றன…
வாத்தியார் பாடம் எடுப்பதுபோல எழுதி இருக்கிரேன் புரியவில்லை என்று மட்டும் சொல்லிவிடாதிர்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு புரிந்துகொள்ளுங்கள்… நன்றி
நண்பரே Wi Fi - ன் முழுப் பெயர் மற்றும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியும் விளக்குங்களேன்.
நன்றி
தமீம்.
"Wireless Fidelity" என்பதன் சுருக்கம் தான் வைஃபை.
ஒரு Wi Fi ரவுட்டர் வாங்கி வீட்டு இணைய இணைப்போடு இணைத்துவிட்டால் வயர்லெஸ்ஸாய் மடிக்கணிணியில் வலைமேயலாம். அல்லது Wi Fi வசதியுள்ள செல்போனில் வலைமேயலாம்.
நன்றி பி.கே.பி அவர்களே,
அப்படியே அதன் மாடல் மற்றும் விலை பற்றிய விபரத்தையும், இந்தியாவில் அதை எங்கு வாங்கலாம் என்றும் கூறுங்களேன்…?
நன்றி
தமீம்.
திரு jrk ம்ற்றும் pkp அவர்களுக்கு
மிக்க நன்றி, நல்ல விளக்கம்..
G.R..
அன்பின் தமீம்,
இந்தியாவில் அனைத்து ISP களும் தங்களுடைய அகலபட்டை இணைப்புடன் Modem/Router ஐ குறைந்த விலைக்கு இணைத்தே தருகிறார்கள். அதிலும் அரசு துறை நிறுவனமான BSNL - ல் Type-II and Type-IV என இருவகை Wi-Fi enabled Modem cum Router கிடைக்கின்றது. விலை வெறும் 1800/- மட்டும் தான். இதில் Type-IV -ல் Modem+4Port Switch + Wi-Fi AP cum Router ஆக வருகின்றது. வெளிமார்க்கெட்டில் இதன் விலை குறைந்தபட்சம் 3600/- ஆகும். தற்போது அளவில்லா இணைய வசதி (Unlimited Internet Access) க்கான மாத கட்டணம் 750/- (வீடுகளுக்கு மட்டும்) தான். மேலும் தகவல் தேவையென்றால் இதில் மறுமொழி இடவும்.
with care and love,
Muhammad Ismail .H, PHD,
What is the price of 4 port router? not only BSNL





