சில தினங்களுக்கு முன்பு நீங்கள் எழுதிய “மென்கொடை” என்ற பதிவின்
தலைப்பைப் பார்த்துவிட்டு நேரே விஷயத்திற்கு சென்று விட்டேன்.
பிறகு அன்றாட Next extent fail, hit ratio என்று வேலையைப் பார்க்க
ஆரம்பித்துவிட்டேன். சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒரு flash.
மறுபடியும் உங்கள் வலைதளத்திற்கு வந்து “மென்கொடை” யைத் திறந்தேன்.
இப்போது நான் திரும்பத் திரும்பப் படித்தது பதிவை அல்ல.
பதிவின் தலைப்பை மட்டுமே. முதல் தடவை அது அவ்வளவாக என்னை
disturb செய்யவில்லை. பிறகு ரொம்பவே.
நன்கொடை என்ற சொல்லிலிருந்து நீங்கள் அந்த புதிய சொல்லைக்
கையாண்டிருக்கக் கூடும் என்றெண்ணுகிறேன்.
நன்கொடை - மென்கொடை/நன்கொடை - மென்கொடை என்று சில நிமிடங்கள்
அதையே என் மனம் சொல்லிக்கொண்டிருந்தது.
சில தினங்களுக்கு முன்பு எனக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.
e-mail ஐ மின்னஞ்சல் என்கிறோம் ஆனால் e-books ஐ மென்புத்தகம் என்கிறோம்.
ஏன்? மின்புத்தகம் என்றல்லவா சொல்ல வேண்டும். soft copy - hard copy என்ற
சொல்லிலிருந்து மென்புத்தகம் என்று புழக்கத்திற்கு வந்திருக்கக்கூடுமென
பிறகு சமாதானம் செய்து கொண்டேன். so e-donation ஐ மென்கொடை எனலாம்.
மென்கொடை என்ற தலைப்பு நன்றாக இருக்கிறது. எழுதுவதிலும் முன்புக்கு
இப்போது நல்ல முதிர்ச்சித் தெரிகிறது. நான் குமாஸ்தா எழுத்தாளன் என்று
முடித்திருந்தது அழகு. அதே போல் இன்னொரு பதிவில் 'Knock out ஆகி
நாளாயிட்டது என்றான்' என்று முடித்திருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது.
மற்றபடி 'அப்ப நான் வரட்டா' என்றெல்லாம் முடிகாதீர்கள். பதிவிற்குத்
தலைப்பிடுவதும் முக்கியம். எப்படித் தலைப்புகள் வைப்பது மற்றும்
தலைப்புகள் குறித்து
ஜெயமோகன் சமீபத்தில் ஒரு பதிவு
வெளியிட்டிருந்தார். blog மற்றும் புதிதாக எழுத வருபவர்கள் படிக்க வேண்டிய
பதிவு.
எனக்குப் பிடித்தமான சொற்களில் இப்போது மென்கொடையும். வேறு என்ன
சொல்ல?





