வணக்கம் நண்பர்களே நான் பிகேபி தளத்தின் ஒரு வாசகன் என்கிற முறையில் இந்த கருத்தை எழுதுகிறேன் இதை நண்பர்களாகிய நீங்கள் சரியாகவே புரிந்துகொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.
தயவுசெய்து கணினி சம்பந்த தகவல்கள், அல்லாத பொதுவான சந்தேகங்கள்,மருத்துவ தகவல்கள் போன்றவற்றை பதிவதில் இங்கு யாருக்குமே ஆட்சேபனை இருக்க போவதில்லை ஆனால் சமீப நாட்களாக நண்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவறான உரலை கொடுக்கிறார்கள் இன்னும் சிலர் நகைச்சுவை என்கிற பெயரில் ஆபாச தகவல்களை எழுதுகின்றனர் இதனால் பாதிக்கபடுவது நம் சகோதரர்கள் தான் பொதுவாக எல்லா நாடுகளிலும் ஆபாச வார்த்தைகள் தாங்கி வரும் தளங்களை அந்த நாட்டில் இண்டர்நெட் சர்வீஸ் புரவைடர்கள் தடை செய்துவிடுவார்கள் ஒரு தளம் மொத்தம் அடல்ட் சம்பவம் இருக்கவேண்டுமென்பதில்லை சில வாக்குகளை அவ்ர்கள் பில்ட்டர் செய்தாலும் அந்த வகையான தளங்கள் தடைசெய்யப்படும் இதனால் நம்மைப்போன்று பலருக்கும் இந்த தளத்தை திறப்பதில் பிரச்சினை ஏற்படலாம் நம்மால் தளத்தில் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆரோக்கியமான விஷயங்களை விவாதிப்போம் , எழுதுவோம்.
நண்பர்களின் சரியான புரிதலுக்கு நன்றி





