நண்பர்களே நாம் பயர்பாக்ஸ் உலவியில் ஜிமெயில் உபயோகிக்கும்போது அல்லது வேறு ஏதாவது கடவுச்சொல் கேட்கும் தளங்களில் Remember_Never for this site_ Not Now
என எப்பொழுதும் தொல்லை தரும் Remember என கிளிக்கி விட்டால் மீண்டும் அதே தளம் திறக்கும்போது நமது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் இரண்டும் பதிந்தே வரும் Never for this site தேர்வு செய்தால் நமது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் உலவியில் சேமிக்கபட்டுவிடும் நாம் மட்டுமே உபயோகிக்கும் கணிணியாக இருந்தால் பரவாயில்லை அலுவலக கணிணி என்றால் பலரும் உபயோகிக்க வேண்டி வரலாம் அப்பொழுது நமது கடவுச்சொல் தெரிந்து விடும் அல்லவா?


Not Now தேர்வு செய்தால் தற்சமயம் மட்டும் நிபந்தனை விதிக்காமல் திறக்கும் மீண்டும் திறக்க நினைக்கையில்
இது போலவே வரும் இப்ப நாம் பார்க்க போவது இது குறித்துதான் அதாவது Remember_Never for this site_ Not Now இது போன்ற ஒரு தெரிவு வராமல் செய்வது என்பது பற்றித்தான் Never for this site என தேர்வு செய்தாலும் நமது உலவியில் நமது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் சேமிக்கபடமாட்டாது அதே வேளையில் அடிக்கடி Remember_Never for this site_ Not Now இது போன்ற தொல்லையும் வராது இதுவும் ஒரு வகை ஹாக்கிங் போலதான்
இனி இந்த தளத்தில் போய் Download என்பதை கிளிக்கவும் பின்னர் கீழே உள்ள Binary files என்பதை கிளிக்கினால் Download Notepad++ executable files என்கிற exe பைல்(3.08mb) தரவிறக்கி கணிணியில் நிறுவிக்கொள்ளவும் இனி தாங்கள் பயர்பாக்ஸ் உலவி கணிணியில்(C:) டிரைவில் பதிந்திருந்தால்
Local Disk(C:) >program files >Mozilla Firefox >components திறந்து nsLoginManagerPrompter என்கிற JScript Script File-யை வலது கிளிக் செய்து Edit with NotePad ++ (நாம் முன்னமே கணிணியில் பதிந்ததுதான்) திறக்கவும் இது சாதராண நோட்பேட் போலதான் திறக்கும் என்ன இடது பக்கத்தில் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு எண் தரபட்டிருக்கும் இனி அந்த வரிசையில் 642 முதல் 711 வரை உள்ள வரிகளை செலக்ட் செய்து கொண்டு அந்த இடத்தில்
var pwmgr = this._pwmgr;
pwmgr.addLogin(aLogin);

பேஸ்ட் செய்யவும் அவ்வளவு தான் இனி பயர்பாக்ஸ் உலவியில்
எப்பவும் வராது இனி தாங்கள் முன்னமே இன்ஸ்டால் செய்த Notepad++ executable files பைலை ரிமூவ் செய்து விடலாம் இந்த Notepad++ executable files நாம் கணிணியில் இன்ஸ்டால் செய்தது 642 முதல் 711 வரை உள்ள வரிகளை சரியாக கண்டு ரிமூவ் செய்வதற்காக மட்டுமே சாதரண நோட்பேடில் நம்மால் வரிகளை கண்டு கொள்வது சிரமமே
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்





