திரு முருகேசன் அவர்களே,
உங்களுடைய கருத்துக்கள் என்னை துளி அளவும் புண்படுத்தவில்லை. ஏனென்றால் உங்களுடைய பார்வையில், உங்களுடைய அனுபவத்தில், உங்கள் கருத்துக்களைக் கூறி உள்ளீர்கள்.
ஆனாலும் உங்களுக்கு சில விளக்கங்களை அளிக்க ஆசைப்படுகிறேன்.
நீங்கள் சொன்ன தளத்தில் வந்திருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள், வேலிக்கு ஓனாண் சாட்சி என்பது போல இதில் வந்திருக்கும் விளம்பரங்கள் எல்லர்ம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எல்லாமே PTC தள்ங்களின் விளம்பரங்கள்தான்.என் தளத்துக்கு வா விளம்பரம் பார் பணம் சம்பாதி என்கிற கில்லாடி வெப்சைட்டுக்கள்தான். மற்றபடி ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள் ஏதாவது உள்ளதா?
நான் முன்னரே கூறி விட்டேன். "ஆனால் சில ஏமற்று இணையதளங்களும் உள்ளன. இத்தளங்களில் சேருவதற்கு முன் கூகுளில் தேடிப்பார்த்துவிட்டு சேரவும்."
இப்பக்கத்தில் உள்ளவை பெரிய budget அளவிலான விளம்பரங்கள். எனவேதான் ரெஜிஸ்டர் பண்ணாத யூசர்களுக்கு இலவசமாகக் காட்டுகின்றன. நீங்கள் ரெஜிஸ்டர் பண்ணிவிட்டு அந்த வெப்சைட்டின் Home page- i 15 செகன்டுக்கு ஒருமுறை refresh பண்ணி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த "ஜனரஞ்சகமான பொருட்களுக்கான விளம்பரங்கள்" அவ்வப்போது வரும். சில நிமிடங்களிலேயே மறைந்துவிடும். ஏனென்றால் அவை சிறிய budget அளவிலான விளம்பரங்கள். ஏனென்றால் online இல் இருப்பவர்கள் சில நிமிடங்களிலே பார்த்துவிடுவார்கள். இந்த வெப்சைட்டை பற்றி உலகப் புகழ் பெற்ற alexa.com ல் போய் பாருங்கள்.
http://www.alexa.com/siteinfo/www.neobux.com
இரண்டு டாலருக்கு 100 Unique Hits வந்ததாக கூறியுள்ளீர்களே. அந்த 100க்கே 1 டாலர் சரியாகிவிட்டது, அப்புறம் Refferal அடிப்படையில் வேறு செலவு இருககிறது, ஒன்றரை டாலர் செலவாகிவிட்டதாக கொள்வோம். பிறகு நடைமுறை செலவுகளுக்கு யாரிடம் கடன் வாங்குவார்கள்.
என்ன கணக்கு இது?
இரண்டு டாலருக்கு 100 Unique Hits
100 Unique Hits = $ 1
referals = $0.5
மீதம் உள்ள $ 0.5 கடன் அல்ல. இலாபம். 100 Unique Hits க்கு $0.5 லாபம் என்றால், ஒவ்வொரு மெம்பரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 விளம்பரங்கள் பார்க்கிறார்கள். அந்த வெப்சைட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கின்றனர். கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.. 4 மில்லியன் விளம்பரங்களுக்கு எவ்வளவு லாபம் வரும்? ( ஒரு நாளைக்கு $ 20000)
உண்மையிலேயே இவர்கள் தொடர்ந்து பணம் தருவதாக இருந்தால் நீங்கள் சொன்ன 500 நாளில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைப் பெற்றிருக்க முடியும். இவர்கள் வேறு எதற்காகவோ திட்டமிடுகிறார்கள்
தினசரி global internet users traffic -i இங்கு பாருங்கள்.
http://www.alexa.com/siteinfo/www.neobux.com
1. விளம்பரத்தில் காணும் அனைத்து PTC சைட்டுக்களுமே ஒரு தனிப்பட்ட நபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ சொந்தமானதாக இருக்கலாம். இந்த சைட்டில் பணம் தருவதன் மூலம் அவர்களின் பிற வெப்சைட்களில் உறுப்பினராக்க முயற்சி செய்யலாம். விள்ம்பரத்தில வரும் அனைத்து சைட்டுகளுமே நீங்கள் கட்டும் கட்டணத்தின் அடிப்படையில் பே அவுட் லிமிட் அளிக்கின்றன. - rabbitmails.com என்ற இணையதளம் இதைத்தான செய்கிறது.
எனக்கு rabbitmails.com பற்றி தெரியாது. ஆனால் NeoBux இல்,
1. நீங்கள் சேருவதற்கு ஒரு பைசா கூட கட்ட தேவை இல்லை.
2. Minimum பே அவுட் லிமிடை 50 நாட்களுக்குள் அடைந்து விடலாம் (யாரையும் பரிந்துரை செய்யாமல்- தினமும் விளம்பரம் பார்ப்பதற்கு 5 நிமிடம் கூட ஆகாது. மேலும் விளம்பரத்தைக் க்ளிக் செய்துவிட்டு வேறு வெப்சைட்டைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்).
3. பணம் எடுப்பதற்கும், பணம் கட்ட தேவை இல்லை.
எனவே இந்த வெப்சைட்டில் சேருவதால் உங்களுடைய கைப்பணம் ஒரு பைசா கூட செலவாகாது.
( Membership upgrade பண்ணுவது உங்கள் சொந்த முயற்சி. நம்பினால் Membership upgrade பண்ணுங்கள்)
2. நீங்களும் வெப்சைட்டை நடத்தும் குழுவில் ஒருவராக இருக்கலர்ம் அல்லது வெப்சைட்டை நடத்தும் தனிநபராக இருக்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் அப்படித்தான் செய்தார். ஆசிரியராக பணிபுரியும் அவர், கோயம்புத்தூரிலேயே கம்பெனி உள்ளது. மாதம் மாதம் ஐசிஐசிஐ பேங்கின் பே கார்டு மூலமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று நிறைய பிட்டுக்களைப் போட்டு நிறைய பேரை சேர்த்து விட்டார். கடைசியில் கம்பெனிகாரன் அல்வா கொடுத்த பிறகு, இவர் தான் சேர்த்து விட்டவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்து தன் நற் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை வந்தது. ஒருநாள் மது அருந்திவிட்டு போதையில் என் வீட்டுக்கு வந்து என்னிடம் சொன்னது
" தம்பி முருகேசா, இந்த •••• கம்பெனிகாரனுக நீ நெறைய பேத்த சேத்து வுடு, உன்ன கம்பெனில பார்ட்னர சேத்துக்கிறோம் நிறைய லாபம் கொடுப்போம்னு சொன்னானுக கடைசில மொத்தமா •••••• கொடுத்துட்டானுக. கடைசில பி.எப் லோன் போட்டுதான் பேரைக் காப்பாத்திக்க முடிச்சுது"
வாய்ப்ப்பே இல்லை. இந்த கம்பெனி போர்ச்சுக்கல்லில் உள்ளது.
refer: http://whois.domaintools.com/neobux.com
கூகுளுடன் compare பண்ணி பாருங்கள்.
refer: http://whois.domaintools.com/google.com
நான் யாரையும் பணம் கட்டி சேர சொல்லவில்லை. எனவே நான் யாருக்கும் நஷ்ட ஈடு கொடுக்க தேவையில்லை.
3. நீங்கள் கொடுத்துள்ள போரம் லிங்கில் உள்ளபடி ஒரு வெப்பேஜை உருவாக்க ஒன்றும் பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை. அதையெல்லாம் ஒரு சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. நீங்கள் சொல்லும போரம் லிங்ககில் கூட Topic: How many from Tamil Nadu?? மூனறு பக்கங்கக்ளில் முப்பதுக்கும் குறைவான நபர்களே இடம் பெற்றுள்ளனர் அதிலும் நீங்களே இரண்டு முறைக்கு மேல்.
அது ஒன்றும் சாதாரண forum இல்லை. இன்று topic create பண்ணினால் நாளைக்கு reply கிடைக்க. ரெம்ப active ஆன forum. நீங்கள் ஒரு சம்பந்தமில்லாத topic-i ( just give your blog address -) அந்த forum இல் create பண்ணி பாருங்கள். அடுத்த நிமிடமே reply கிடைக்கும்.அல்லது ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு அக்கவுண்ட் create பண்ணி பாருங்கள். சிறிது நேரத்தில் உங்களை ban பண்ணி விடுவார்கள். அந்த forum -i முழுமையாக நீங்கள் முழுமையாக படிப்பதற்கு கண்டிப்பாக ஒரு மாத காலமாவது ஆகும். அவ்வளவு தகவல்கள் (News about NeoBux, Payment Proofs, Member Introduction, AlertPay Support, Bug Reports, Problems and Doubts, Non-English)உள்ளன.
4. நான் மேற் குறிப்பிட்டுள்ள இரண்டாவது பாயிண்ட உண்மை என்று எடுத்துக் கொண்டால் நீங்கள கொடுததுள்ள வீடியோ ஆதாரம் பணால் ஆகி விடுகின்றது.
இரண்டாவது பாயின்ட் உண்மை இல்லை. இதில் இதுவரை நான்கு முறை பணம் எடுத்துள்ளேன். மூன்று முறை அதை screen record பண்ணியுள்ளேன். (முதல் தடவை screen record பண்ணவில்லை. ஏனென்றால் அதை நான் அப்பொழுது நம்பவில்லை). அடுத்தவாரம் மீண்டும் பணம் எடுக்க உள்ளேன். வேண்டுமென்றால் மெயில் பண்ணுங்கள். சுடச்சுட வீடியோ அனுப்பி வைக்கிறேன்.
நான் உங்களை குற்றம் சொல்வதாக எடுத்துக கொள்ள வேண்டாம். தமிழ நெஞ்சம் சொன்னது போல உழைத்தே சம்பாதிப்போம்.
No Pains No gains
படித்திருப்பீர்கள்.
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இங்கு நிறைய சம்பாதிப்பது என்பதும் எளிது அல்ல மற்றும் ஒரே மாதத்தில் லட்சாதிபதியும் ஆக முடியாது. நீங்கள் சிலவற்றை சரியாக செய்ய வேண்டும். பொறுமையும் வேண்டும். (நானும் பல வெப்சைட்டில் சேர்ந்து ஏமாந்தும் உள்ளேன். நல்ல வேளையாக பணம் கட்டி சேரும் எந்த வெப்சைடிலும் நான் சேரவில்லை.)
நான் சொன்ன அனைத்துமே தவறாக இருந்து, நீங்கள் சொல்வது போல சரியாகவே இருந்தாலும் இது நீடிக்க போவதில்லை, காலம் உங்களுக்கு உணர்த்தும். நான் உங்களை கேட்டுக் கொள்வது எல்லாம் போகும் பாதை சரிதானா என்பதை முற்றிலும் உணரும முன்பே மற்றவர்களையும் சேர்த்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்பதுதான்,
உலகப் புகழ் பெற்ற "லேமன் பிரதர்ஸ் வங்கி" யே திவால் ஆகும் பொழுது, இந்த உலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கடவுள் ஒருவரே அறிவார். ( கூகுள் கூட crash ஆகலாம். ஜிமெயில் செர்வர் கூட Hack பண்ணலாம். எனவே இந்த வெப்சைட் இருக்கும் வரை சம்பாதிதுவிட்டு சந்தோசமாக இருங்கள்.)
இன்னும் தகவல் வேண்டும் என்றால் கேளுங்கள். விளக்கமளிக்க தயாராக உள்ளேன்.
நன்றி நண்பரே,
க. இராமச்சந்திரன்
பின் குறிப்பு:
உங்களிடம் ஒரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் அளியுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.
நீங்கள் Google AdSense-i நம்புகிறீர்களா?
ஆம் என்றால், எதை வைத்து நம்புகிறீர்கள்?
இல்லை என்றால் ஏன் நம்பவில்லை?