அன்பின் சகோதர, சகோதரிகளே,
நாங்கள் நடத்திவரும் ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவையின்/ Integrated Tsunami Watcher Service இணையதளமானது தற்போது சொந்த தளத்திற்க்கு மாற்றப்பட்டு விட்டது. இனி அது www.iibc.in/itws/ என்னும் புதிய முகவரியில் இயங்கும். இது வரை அதற்கு இடமளித்து உதவி புரிந்த அன்பு நண்பர் Angelo Cyril -க்கு மிக்க நன்றிகள் பல.
மேலும் எனது ஒரேயொரு பதிவை தனது தளத்தில் மறுபதிவு செய்து அதை அனைவரும் அறிய செய்ததோடல்லாமல் அதன் வாயிலாக தற்போது உபயோகத்தில் உள்ள நிறைய செல்லிட பேசிகளின் எண்களை பெற உதவி செய்த அன்பின் பிகேபியனந்தாவிற்கு நன்றி கோடி கோடிகள்.
இதை ஆரம்பித்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. இது வரை 12th Sep 2007 அன்று ஏற்பட்ட கடலடி பூகம்பத்தை பற்றி எச்சரிக்கை செய்து மக்களை கடலோரத்திலிருந்து அபாயமற்ற இடத்திற்கு இடமாற்றம் செய்ய இயன்றது. இது வரை நான் கேட்ட கேள்விக்கு Indian National Centre for Ocean Information Services (INCOIS) இடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. உண்மையில் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை அமைப்பு உள்ளதா ? அல்லது வெறும் கண்துடைப்பிற்காக திறப்பு விழா நடத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. அதுவும் கடற்கரையோரத்தில் இல்லாமல் ஐதராபாத்தில் என் அமைக்கப்பட வேண்டும் என்றும் விளங்கவில்லை. இங்கே குழப்பமான நேரத்தில் STD -ல் தொலைபேசியா விவரம் கேட்க முடியும் ? ஒன்றும் சொல்வதற்க்கில்லை.
உண்மையில் இப்படி ஒரு அமைப்பு இருந்தால் அதன் தகவல்கள் எவ்வாறு கடற்கரையோர மக்களுக்கு கொண்டு சேர்ப்பிக்கப்படுகிறது என்ற எனது கேள்வி அப்படியே தான் உள்ளது. சுனாமியை கண்டுணர்வதைவிட அது பற்றிய தகவலை பாதிக்கப்படும் வாய்ப்புள்ள கடற்கரையோரம் வாழும் ஒவ்வொரு உயிர்களிடத்திலும் கொண்டு சேர்ப்பது தான் அதன் முழுமையான வெற்றியாகும். ஆழிப்பேரலை(சுனாமி)உருவாக சில நியதிகள் உண்டு. அவை கடலுக்கடியில் 7.5 அளவிற்க்கு மேலான நிலநடுக்கம்(பூமி அதிர்ச்சி), குறிப்பு- (மனிதர்கள் வாழும் நிலத்தில் எவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டலும் அது ஆழிப்பேரலையை உருவாக்க இயலாது) அல்லது விண்ணிலிருந்து பெரிய அளவில் உள்ள விண்பொருட்கள் கடலில் மோதுகை, ஆழ்கடலில் மிகப்பெரிய மண்சரிவுகள் அல்லது கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடிப்பு போன்றவை ஆழிப்பேரலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
ஆழிப்பேரலை தாக்குதலுக்கு முன் கடலானது கடற்கரையிலிருந்து பின் வாங்கி சென்றுவிடும்.மேலும் ஆழிப்பேரலை குறித்து யாரும் பெரும் கிலி கொள்ள தேவையில்லை. அதனால் கடற்கரையின் இருபுறமும் அதிகபட்சமாக 2 கி.மீ வரை தான் சேதத்தினை ஏற்ப்படுத்திட இயலும்.நாம் ஆழிப்பேரலையை முன்கூட்டியே கணித்து அதைப்பற்றிய விவரத்தை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்த்து விட்டால் ஏகப்பட்ட உயிர்களை காப்பற்றிவிடலாம். மேலும் இலங்கை, இந்திய மீனவர்களிடம் இதை சேர்த்துவிட்டால் அவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை இயக்கி ஆழிப்பேரலை வருவதற்க்குமுன் கடலுக்குள் சென்றுவிடலாம்.கடலில் அவர்கள் 2கி.மீ தூரம் தாண்டிவிட்டால் பயமில்லை.இதனால் பெருமளவில் உயிர் மற்றும் பொருள் சேதத்தினை தவிர்த்திடலாம். இந்த விஷயம் நிறைய பேர்களுக்கு தெரியாது. காரணம் இந்தேனேஷியாவில் பாரிய பூகம்பம் ஏற்ப்பட்டு ஏறத்தாழ 2 மணி நேரம் கழித்தே ஆழிப்பேரலை இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளை தாக்கியது. சரியான நேரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு இருந்தால் சேத அளவு கணிசமாக குறைந்து இருக்கும். இனிவரும் காலங்களில் இறை உதவியால் இதை நாமனைவரும் செயல் படுத்துவோம்.
மேலும் கடற்கரையோர மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை எங்களால் இயன்ற வரை ஏற்படுத்தி வருகிறோம். ஆழிப்பேரலை பற்றிய தவறான கருத்துகளுக்கும் இயன்ற அளவு பதில் அளித்து வருகிறோம். அதற்கு இங்கே உதாரணம் உள்ளது. இதைப் படித்து பார்க்கும் சகோதர, சகோதரிகள் மேலும் நேரடியான விளக்கம் கேட்டால் அங்கு வந்து ஆழிப்பேரலை பற்றி விழிப்புணர்வு பாடம் நடத்த நாங்கள் தயார்.
என்றும் பொறுப்பும் & அன்புள்ள,
முஹம்மது இஸ்மாயில் .ஹ ,PHD,
+91.94420.93300





