நண்பரே!
என்னுடைய மடிகணிணியில் nCleaner software நிறுவி Scan , clean செய்ய முயன்றேன். திடீரென கணிணி நின்று விட்டது. இரண்ட்டொரு முறை மீண்டும் முயன்றேன். அதே கதைதான் தொடர்ந்தது. மீண்டும் திறந்து இயக்க முயன்ற போது எந்த கோப்பையும் திறக்க முடியவில்லை. முக்கியமாய் கன்ட்ரோல் பானலை திறக்க முடியவில்லை. ஆடியோ, வீடியோ எதுவும் வேலை செய்ய வில்லை. இணைய இணைப்பைக் கூட கொடுக்க முடியவில்லை. “This file does not have a program associated with for performing this action. Create an association in the folder options control panel.”என்று வருகிறது.
அட்மினிஸ்டேட்டரால் தான் இதை சரி செய்ய முடியுமா? (அ) ஃபார்மாட் செய்யத்தான் வேண்டுமா? நான் கணிணி, இணையம் இரண்டுக்கும் புதியவன்.உங்களைப் போன்றவர்களால் தான் கொஞ்சமாவது இணைய அறிவு பெற்று வருகிறேன். நான் ஒரிசாவில் ஒரு சுரங்கப்பகுதியில் பணிபுரிகிறேன். நகர்புறத்திற்கு வெகு தொலைவு செல்ல வேண்டும். கொஞ்சம் வழி காட்டுங்கள்.
(மற்ற டேட்டா ஃபைல்களைத் திறக்க முடிகிறது. அதுவும் வலது கிளிக் செய்து Run as.. கொடுத்தால் which user account do you want to use to run this program? என்று கேட்கிறது? அப்போது Current user ஐ கிளிக் செய்தால் மட்டுமே திறக்க முடிகிறது. அட்மினிஸ்டேட்டருக்கு பாஸ்வார்டு கேட்கிறது.)
windows opening problem





