ஆக்சஸ் பாஸ்வேர்ட் மறந்து போச்சா?
Access.jpg

அருமையான மென்பொருள் அதுவும் இலவசமாய் இணையத்தில் கிடைப்பதை கண்டால் நான் உடனே அதை குறித்து வைப்பதுண்டு. ஆனால் சமீபகாலமாக இது மாதிரி நான் முன்பு எப்போதோ ஒருமுறை குறித்துவைத்த சில இலவச மென்பொருள்களை இறக்கம் செய்ய இப்போது போனால் காசுகேட்கின்றார்கள். அதாவது முதலில் வெள்ளோட்டமாக இலவசமாய் வழங்கப்படும் மென்பொருள்கள் சூப்பர் ஹிட் ஆனதை பார்த்ததும் சில நாட்களில் அதற்கு அதை தயாரித்தோர் விலைகுறித்து விடுகின்றார்கள். இதில் நாம் அவர்களை சொல்லியும் குற்றமில்லை. இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் போகின்ற போக்கைப்பார்த்தால் எதாவது ஒரு வழியில் தங்கள் உழைப்பை monetize பண்ணத்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.அதனால் இப்போதெல்லாம் ஏதாவது ஒரு கூல் மென்பொருள் இணைய உலா வரும்போது பார்வைக்கு வந்தால் உடனே இறக்கம் செய்து வைத்துக் கொள்கின்றேன். சோம்பலில் இன்னொருமுறை இறக்கம் செய்யலாமென்று விட்டு விட்டால் அப்போது அது இலவசமாய் கிடைக்குமா என்பதில் உத்திரவாதம் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் நான் விரும்பி இறக்கம் செய்த ஒரு மென்பொருள் Microsoft Access-ன் .mdb கோப்புகளின் கடவுசொல்லை மறந்து போனால் அதை மீட்டுத்தரும் ஒரு இலவச மென்பொருள்.அதன் பெயர் Database Password Sleuth. இது Microsoft Access 95/97/2000/2002 database-களின் password -களை ஒரே சொடுக்கில் உடைத்து தருகின்றது.

Product Home Page
http://www.shatterock.com/products/software/dbpwd/

Direct download link
http://www.shatterock.com/products/software/dbpwd/dbpwd.zip

உங்கள் குட்டிமென்பொருள்களின் கலெக்சனில் இதையும் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் யாராவது பாஸ்வேர்ட் மறந்து போய் கண்ணைத் தள்ளிக் கொண்டிருந்தால் கொடுத்து உதவலாம். அதுபோல எக்ஸெல் கோப்பு ஒன்றின் பாஸ்வேர்ட்டை மறந்து போனால் இங்கே வாருங்கள். இன்னொரு இலவச மென்பொருள் அதற்காக இருக்கிறது. அது உதவலாம். இப்படி அடுத்தவர்களுக்கு ஒரு உதவி செய்து அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியால் நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கின்றதே. அதற்கு ஈடு இணை கிடையாதுங்க.

Add a New Comment
or Sign in as Wikidot user
(will not be published)
- +
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License