அங்கே இரவா பகலா? கண்டறியுங்கள்

இருளென்று ஒன்றில்லையாம்.வெளிச்சம் இல்லாமையே இருட்டாம்.அப்படி சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது.ஒளியின் வேகத்தை கணக்கிடும் விஞ்ஞானம் இருளின் வேகம் சொல்லவில்லையே.ஒளி ஒரு துகளாகவோ அல்லது அலையாகவோ இருக்கலாமாம்.இருள்…?-அப்படி எதுவுமே இல்லை.அது ஒரு துகளும் இல்லை அல்லது அலையும் இல்லை.Dark is just a dictionary word என்கிறார்கள்.இது இன்றைய நிலை. நாளை இன்னொறு ஐன்ஸ்டீன் வந்து புதிதாக எதாவது கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் விட்டு தள்ளுங்க.இந்த இணைய பக்கத்தை பாருங்கள்.

அருமையாய் உலக உருண்டையில் நிகழும் இரவு பகல்கள் எல்லாம் ஒரு நிழலின் அசைவாட்டம் என அழகாய் காட்டுகிறார்கள்.(படம் எடுக்கப்பட்ட போது இந்தியாவில் நடுநிசி மற்றும் அமெரிக்காவில் நடுப்பகல் நிலை.)
Google%20daylight%20map.jpg
http://www.daylightmap.com/

கூடுதலாக இன்னொறு கூகிள் மேப்.மவுசை உலாவ விட்டு பாருங்கள்.அவரவர் நேரம் தெரியும்.எல்லாம் டெவலப்பர்கள் Google Map API-யோடு போடுகின்ற ஆட்டம் தான்.
Google%20Map%20World%20Time.jpg
http://www.qlock.com/time/gmaps?map=1

Google Map to Check world international time and Day Night status

Add a New Comment
or Sign in as Wikidot user
(will not be published)
- +
Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License